கிளிநொச்சி நகரில் தொற்று நீக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினர்
நாளை மறுதினம் இயல்பு நிலைக்கு திரும்பவுள்ள கிளிநொச்சி நகரின்மத்திய பகுதியில் இன்று இராணுவத்தினர் தொற்று நீக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
இன்று காலை 09 மணிக்கு கிளிநொச்சி ஏ9 வீதியின் டிப்போச் சந்தி தொடக்கம் கரடிபோக்குச் சந்திவரை காணப்பட்ட வங்கிகள், நீதிமன்றம், வர்த்தக நிலையங்கள், ஆலயங்கள் உள்ளிட்ட பகுதிகளில் படையினர் கிருமி தொற்று நீக்கும் பணியை மேற்கொண்டனர்.
இந்தப் பணியில் இராணுவத்தினருக்கு ஒத்துழைப்பாக சுகாதார பிரிவினரும், பொலிஸாரும் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.