இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு காய்ச்சல் அறிகுறி இருந்ததையடுத்து கொவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் தற்போது அவர் எய்மஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.