சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை:தமிழகத்தில் நேற்று 1,65,325 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 1,969 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
29 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் 194 பேர், கோவை 223, செங்கல்பட்டு 115, ஈரோடு 198, தஞ்சாவூர் 110 என 5 மாவட்டங்களில் மட்டுமே நேற்று நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மற்ற 33 மாவட்டங்களில் 100க்கும் கீழ் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது