ஜோ பைடன் மற்றும் நரேந்திர மோடிக்கு இடையில் சந்திப்பு

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

வெள்ளை மாளிகையில் நேற்று(24) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது கொவிட்-19 பரவல் கட்டுப்பாடு மற்றும் காலநிலை மாற்றம் என்பன தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் தெரிவானதையடுத்து இரு நாட்டு தலைவர்களும் சந்தித்துக்கொள்வது இதுவே, முதற்தடவையாகும்.

இந்த சந்திப்பு தொடர்பில் கருத்துரைத்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இருநாட்டு உறவும் பல சர்வதேச பிரச்சினையை தீர்க்க உதவும் என குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir