இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் விசாரணைசெய்யப்படவேண்டும்: நோர்வே தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் கம்சி

அண்மையில் நடைபெற்ற நோர்வே நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றுக்கு தெரிவான கம்சாயினி தற்போதைய இலங்கையுடனான பொருண்மிய உறவை நோர்வே அரசு தொடர்ந்து பேண வேண்டும் என்றும் பொருண்மிய உதவிகளைச் செய்யும் போது அனைத்து மக்களுக்கும் அந்தத் திட்டங்கள் சென்று சேர்வதை உறுதிப்படுத்தும் வாய்ப்பு அப்போது தமக்கும் கிடைக்கும் என்றுதெரிவித்துள்ளார் .

தனது முதன்மைப்பணி தன்னை நாடாளுமன்றத்துக்கு அனுப்பிய நோர்வே மக்களுக்குப் பணிபுரிவது என்பதை வலியுறுத்திய கம்சாயினி, தனது கட்சியான தொழிற்கட்சியுடன் இணைந்து தமிழ் மக்களுக்கான பணிகளை முன்னெடுக்கத் தனக்கு இருக்கும் ஆர்வத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். அவ்விடயத்தில் யாராயிருந்தாலும் அவர்களுடன் பேசுவதற்குத் தான் தயாராக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir