கனடாவில் கொரோனாவால் 4,147பேர் பாதிப்பு; 45பேர் உயிரிழப்பு!

கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 4,147பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 45பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 28ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 16இலட்சத்து 55ஆயிரத்து 380பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 28ஆயிரத்து 186பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 41ஆயிரத்து 216பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 776பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 15இலட்சத்து 85ஆயிரத்து 978பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir