ரஷ்யாவில் கொரோனா இறப்பு நான்காயிரத்தை கடந்தது!

ரஷ்யாவில் கொரோனா  தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை நான்காயிரத்தை கடந்துள்ளது.

இதன்படி, ரஷ்யாவில் ஒட்டுமொத்தமாக 4,142பேர் உயிரிழந்துள்ளதாக ரஷ்யாவின் கொரோனா வைரஸ் நெருக்கடியை கண்காணிக்கும் மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ரஷ்யாவில் 8,371பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 174பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் அதிக பாதிப்பை எதிர்கொண்டுள்ள மூன்றாவது நாடான ரஷ்யாவில், வைரஸ் தொற்றுக்கு இதுவரை மொத்தமாக 379,051பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு 223,916பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களில் 2,300பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. மேலும், 150,993பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்

You May Also Like

About the Author: kalaikkathir