அமெரிக்காவில் ஒமைக்ரொன் மிக வேகமாக பரவும் அபாயம் – ஜோ பைடன்

அமெரிக்காவில் முழுமையான தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் செயலூட்டி தடுப்பூசியை செலுத்திக்கொள்ளலாம் என்று ஜோபைடன் கூறியுள்ளார்.

ஒமைக்ரொன் திரிபு தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தற்போது பரவிவரும் ஒமைக்ரொன் வைரஸ் வேகமாக பரவக்கூடியது. இது அமெரிக்காவில் மிகவும் வேகமாக பரவத்தொடங்கும்.

தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள் மரணத்தை கூட சந்திக்கலாம். எனவே மக்கள் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். தடுப்பூசி மட்டுமே நமக்கு உண்மையான பாதுகாப்பை வழங்கக்கூடியது.

தடுப்பூசியின் அவசியத்தை மக்கள் அனைவரும் உணர வேண்டும். முழுமையான தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் செயலூட்டி தடுப்பூசியை செலுத்திக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir