விடுதலைப்புலிகள் பாணியில் மிரட்டி தீர்வைப் பெற முயல்வது பயனற்றது!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவையோ அல்லது அவர் தலைமையிலான அரசையோ வெருட்டி – மிரட்டித் தீர்வு பெற முயற்சிப்பது பயனற்றது.

இதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் புரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு ராஜபக்ச அரசின் பேச்சாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

இலங்கை அரசை மீறி சர்வதேசம் எதையும் செய்ய முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

‘சர்வதேசம் எங்களைக் கைவிடாது என்று நம்புகின்றோம். தமிழருக்கு ஒரு தீர்வு கிடைப்பதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் தடுக்க முடியாது.

எவராலும் தடுக்க முடியாது’ என்று தமிழ்த் தேசியக் கூட்ட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் கருத்துரைக்கும்போதே கெஹலிய ரம்புக்வெல மேற்கண்டவாறு கூறினார்.

You May Also Like

About the Author: kalaikkathir