சிறுபான்மையினரின் சமய உரிமைகளுக்கு மதிப்பளிக்கவேண்டும் சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை

இலங்கையில் வாழும் சிறுபான்மையினரின் சமய உரிமைகளுக்கு இலங்கை அதிகாரிகள் மதிப்பளிக்க வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை கேட்டுக்கொண்டுள்ளது.

அதேநேரம் உயிரிழந்தவர்களது இறுதி மரணச் சடங்கை அவர்களது உறவினர்களின் விருப்பம் மற்றும் கலாச்சாரத்துக்கமைய முன்னெடுப்பதற்கு ஒத்துழைக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் கொவிட்-19 தொற்றின் காரணமாக உயிரிழந்த இரண்டு முஸ்லிம்களது சடலங்களின் இறுதிக் கிரியைகளும் அவர்களுடைய உறவினர்களின் விருப்பத்துக்குமாறாக அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்கமைய முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது.

இதனால் இதுபோன்றதொரு காலக்கட்டத்தில் அதிகாரிகள் இனங்களுக்கிடையே வேற்றுமையை வளர்க்காமல் அவர்களை ஒன்று சேர்க்க முற்பட வேண்டும்.

அதற்காக அவர்களது உறவினர்களின் விருப்பத்துக்கமைய இறுதிக்கிரியைகளை முன்னெடுக்க அனுமதியளிக்கப்பட வெண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளது.

You May Also Like

About the Author: Kathiradmin