ஜா-எல பகுதியில் உள்ள திரிபோஷா உற்பத்திச்சாலை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
திரிபோஷா உற்பத்திக்கு கிடைக்கும் பிரதான தானிய வகையான சோளம் இன்னும் கிடைக்காத காரணத்தினால் அந்நிறுவனம் மூடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து சோள உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான திரிபோஷா விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.