கடந்த 24 மணித்தியாலத்தில் 9,035பேர் பாதிப்பு- 162பேர் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் ரஷ்யாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 9,035பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 162பேர் உயிரிழந்துள்ளதாக ரஷ்யாவின் கொரோனா வைரஸ் நெருக்கடியை கண்காணிக்கும் மையம் தெரிவித்துள்ளது.

இதன்படி, ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 414,878ஆக உள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,855ஆக உள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு 234,146பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களில் 175,877பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir