தடுப்பூசிக்கு எதிர்ப்பு – நியூசிலாந்திலும் போராட்டம்

கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நியூசிலாந்திலும் லொறிச் சாரதிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கனடாவில் எல்லை கடந்து செல்லும் லொறி சாரதிகள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்கிற அரசின் உத்தரவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்த நாட்டின் தலைநகர் ஒட்டோவாவில் லொறிகளுடன் சாரதிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்தால் ஒட்டோவாவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த கடுமையான விதிமுறைகள் நடைமுறைப்படுத்திய நாடுகளில் நியூசிலாந்தும் ஒன்று. கொரோனா பாதிப்பு அதிரிகரிப்பு காரணமாக அந்நாட்டு பிரதமர் தனது திருமணத்தை ஒத்தி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நியூசிலாந்தில் அரசின் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து லொறிச் சாரதிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் தலைநகர் வெலிங்டனில் லொறிகள் மற்றும் கார்களில் அணிவகுத்து பாராளுமன்றம் அமைந்துள்ள வீதியை முற்றுகையிட்டுள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir