இன்று சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட மகாலிங்கம் பாலசுந்தரத்தின் வழக்கு விசாரணை!

இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் வீட்டிற்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் மார்ச் மாதம் 14ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் வீட்டு வாசலுக்கு முன்பாக சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட மகாலிங்கம் பாலசுந்தரத்தின் வழக்கு விசாரணை இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிபதி ஏ.சி றிஸ்வான் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இன்றைய வழக்கில் நீதிமன்றில் பொலிசாரால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையினை பரிசீலனை செய்த நீதிவான் குறித்த அறிக்கையில் உள்ள திருத்தங்கள் தொடர்பிலும் ஆராய்ந்து இது தொடர்பான முன்னேற்ற அறிக்கையை எதிர்வரும் வழக்கில் சமர்ப்பிக்குமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

குறித்த வழக்கு விசாரணையானது எதிர்வரும் 14ஆம் திகதிவரை ஒத்திவைத்துள்ளதுடன் கைது செய்யப்பட்டுள்ள மெய்ப் பாதுகாவலரின் விளக்கமறியலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir