உக்ரைனில் தியேட்டருக்கு குண்டுவீசிய ரஸ்யா

மருத்துவமனைகள், பள்ளி கட்டிடங்கள் மீது தாக்குதல் நடத்திய ரஷ்யா படைகள், நூற்றுக்கணக்கான மக்கள் தஞ்சம் அடைந்திருந்த 3 அடுக்குகள் கொண்ட தியேட்டர் மீதும் நேற்று முன்தினம் குண்டுவீசி தாக்கியது.

மரியுபோல் நகரில் உள்ள சினிமா தியேட்டரில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தஞ்சம் அடைந்து இருந்தனர். நேற்று முன்தினம் அந்த தியேட்டர் மீது ரஷ்ய விமானங்கள் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் 3 அடுக்கு மாடி தியேட்டர் இடிந்து விழுந்ததாகவும், இடிபாடுகளில் நூற்றுக்கணக்கான மக்கள் சிக்கி உள்ளதாகவும் உக்ரைன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir