தமிழகத்தில் கொரோனா வைரஸ் இறந்தவர்களின் எண்ணிக்கை 5ஆக உயர்வு

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது.சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 60 வயதான நபர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இராமநாதபுரத்தை சேர்ந்த 71 வயதான ஆண் ஒருவர் கடந்த மார்ச் 2ம் தேதி இறந்தார். இவர் கொரோனா தொற்றால் இறந்தார் என்பது தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது எனத் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த இரண்டு நபர்களின் இறப்பால் தமிழகத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 485ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக டெல்லியில் நடந்த மத நிகழ்வு ஒன்றில் பங்குபெற்ற நபர்கள் பலருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற அந்த நிகழ்வில் பங்கேற்றவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அந்த நபர்கள் அடையாளம் காணப்பட்டு சோதனை நடைபெற்றது. அதோடு, பங்கெடுத்தவர்கள் தாங்களாகவே வந்து கொரோனா சோதனை செய்துகொள்ளுமாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: Kathiradmin