துருக்கியில் உள்ள காசியான்டெப் மற்றும் நிசிப் இடையேயான நெடுஞ்சாலையில் பஸ் ஒன்று 40க்கும் மேற்பட்ட பயணிகளை நேற்று ஏற்றி சென்றது. அப்போது, சாலையில் கார் ஒன்று அதிவேகமாக வந்துள்ளது.
அதன் மீது மோதாமல் இருக்க பஸ் டிரைவர் முயன்றபோது, பஸ் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் மூன்று தீயணைப்பு வீரர்கள், இரண்டு டாக்டர்கள், இரண்டு பத்தரிகையாளர்கள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர்; 22 பேர் படுகாயமடைந்தனர்.துருக்கியில் மோசமான போக்குவரத்து காரணமாக, அதிக எண்ணிக்கையில் விபத்துகள் ஏற்படுகின்றன. கடந்த ஆண்டு மட்டும் விபத்துகளில் 5,362 பேர் உயிரிழந்துள்ளனர்.