தனியார் வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கு அனுமதி

தனியார் வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் 15ம் திகதி முதல் தனியார் வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தனியார் வகுப்பின் இட வசதிக்கு ஏற்பட்ட சமூக இடைவெளியைப் பேணி வகுப்புக்களை நடாத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும் ஒர் வகுப்பில் அதிகபட்சமாக 100 மாணவ மாணவியரே கல்வி கற்க முடியும் என வரையறை விதிக்கப்பட்டுள்ளது.

போதியளவு இட வசதி இல்லாத தனியார் வகுப்புக்களில் முன்னதாக வகுப்புக்களில் கலந்து கொண்ட மாணவ மாணவியரின் எண்ணிக்கையில் அரைவாசி மாணவ மாணவியர் பங்கேற்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir