பள்ளிவாசல்களில் பின்பற்றப்பட வேண்டிய சுகாதார முறைகள்!

கொரோனா தொற்று நோய் காரணமாக மூடப்பட்டிருந்த வணக்கஸ்தலங்களை மீள திறப்பதற்கான அனுமதி 12 ஆம் திகதி வழங்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு அமைய பள்ளிவாசல்களில் பின்பற்றப்பட வேண்டிய ஒழுங்கு முறைகள் பற்றி விளக்கமளிக்கும் செயலமர்வு நேற்று சாய்ந்தமருது ஜும் ஆ பள்ளிவாசலில் நடைபெற்றது.

சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் ஏற்பாடு செய்த இந்த விழிப்புணர்வு செயலமர்வில் பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர் சபை தலைவர்கள், உட்பட பள்ளிவாசல் பரிபாலன சபையின் முக்கிய பதவிகளில் உள்ள பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

பள்ளிவாசல்களில் பின்பற்றப்பட வேண்டிய சுகாதார நடைமுறைகள் பற்றி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல்.எம்.அஜ்வத் இங்கு விளக்கமளித்தார்.

இந்த நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச முஸ்லிம் கலாசார உத்தியோகத்தர் ஆர்.சித்தி ஜெஸீறா, காரைதீவு பிரதேச செயலக முஸ்லிம் கலாசார உத்தியோகத்தர் எஸ்.எம்.ஜெலீலா உட்பட பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பொலிஸ் திணைக்கள அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

You May Also Like

About the Author: kalaikkathir