ஆபாசப் பட நடிகை வழக்கு; விசாரணையை எதிர்கொள்ளும் டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளத் தயாராகும் நிலையில், குறித்த விடயம் தொடர்பில் நியூயார்க் நகரில் உள்ள ட்ரம்ப் டவரில் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

2016 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலுக்கு முன்பு தாங்கள் உடலுறவு கொண்டதாகக் கூறும் ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்தது தொடர்பாக அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். ஆயினும், தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ட்ரம்ப் மறுத்துவருகிறார்.

இந்த நிலையில், குறித்த வழக்கு விசாரணை நடைபெறும் மன்ஹாட்டன் நீதிமன்றத்திற்கு வெளியே ட்ரம்பிற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுமென எதிர்பார்க்கப்படுவதால், அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

76 வயதான ட்ரம்ப், குற்றவியல் வழக்கை எதிர்கொள்ளும் முதல் அமெரிக்க முன்னாள் அதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply