பிரிட்டனுக்கு அரசு முறைச் சுற்றுப்பயணமாக வரும்படி, பிரிட்டன் மன்னர் சார்ல்ஸ் அமெரிக்க அதிபருக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
அமெரிக்க அதிபர் பைடனும், பிரிட்டன் மன்னர் சார்ல்சும் தொலைபேசி மூலம் பேசியதை அடுத்து, சார்ல்ஸ் பதவியேற்பு விழாவில் தாம் கலந்துகொள்ளாத நிலையிலும், தனது மனைவி ஜில் பைடன் கலந்துகொண்டதை பைடன் நினைவு கூர்ந்தார். மன்னர் சார்ல்ஸின் அழைப்பை ஏற்றுக்கொண்டு சுற்றுப்பயணம் செல்வதற்கு தீர்மானித்துள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.
இருப்பினும், அந்தச் சுற்றுப்பயணத் திகதி இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என்று வெள்ளை மாளிகைச் செய்தித் தொடர்பாளர் ஜீயன் பெர்ரி குறிப்பிட்டிருக்கிறார்.
T01