சர்வதேச நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் விசா பெறுவதற்கான கட்டணத்தை அமெரிக்கா அதிகரித்துள்ளது. உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள், அமெரிக்காவில் கல்வி பயில்கின்றனர். இந்த நிலையில் அமெரிக்க அரசு, மாணவர்கள் விசா பெறுவதற்கான கட்டணத்தை 25 டொலர்களால் உயர்த்தியுள்ளது.
இதுவரை மாணவர்களுக்கான விசாக் கட்டணம் 160 டொலர்களாக இருந்துவந்தது. அது தற்போது 185 டொலர்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இதே போன்று ஒப்பந்த வர்த்தகர்கள், முதலீட்டாளர்களுக்கான விசாக் கட்டணமும் 110 டொலர்களால் அதிகரித்துள்ளது. இந்தக் கட்டண உயர்வு அடுத்த மாதம் 30 ஆம் திகதி முதல் அமலுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.