வடக்கில் மதமாற்றத்தில் ஈடுபடும் சபையினருக்கு எதிராக விசேட ஆணைக்குழு ஒன்று நிறுவப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என சிவசேனா அமைப்பினை சேர்ந்த மறவன்புலவு க.சச்சிதானந்தம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்றைய தினம் யாழ் அரியாலையில் உள்ள பில் தெனியா ஆலயத்திற்கு முன்னால் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வடக்கில் மதமாற்ற சபைகள் நிறைந்து காணப்படுகின்றன அவை எந்த சட்டத்திற்கு உட்பட்டு செயற்படுகின்றன என்பது தொடர்பில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.