ரஷ்யாவில் எரிமலை வெடிப்பு 

ரஷ்யாவின் Shiveluch எரிமலை வெடித்துள்ளதால், அதிலிருந்து 20 கிலோமீற்றர் தூரம் வரையில் அதன் தாக்கம் நிலவுகிறது.

எரிமலை வெடித்ததால் பாறைகளும் உருண்டு விழுந்ததோடு, கடுமையான புகையும் தீப்பிழம்பும் சூழ்ந்த எரிமலையின்படங்களைப் பலர் தங்கள் சமூக ஊடகப் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

ரஷ்யாவின் தூரத்துக்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள Shiveluch எரிமலையின்  தீப்பிழம்புகளை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பகுதியை அண்மித்த கிராமங்களில் வசிக்கும் மக்களை, வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும் முகக்கவசத்தை அணியும்படியும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

T01

You May Also Like

About the Author: kalaikkathir