ஜப்பானின் கரூஜவாவில் ஜி 7 நாடுகளின் 2 நாள் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது. குறித்த மாநாட்டில், உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா இரசாயன, உயிரியல் அல்லது அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என ஜி 7 நாடுகள் ரஷ்யாவை எச்சரித்துள்ளன. அவ்வாறே, உக்ரைனிலிருந்து எந்தவிதமான நிபந்தனையும் விதிக்காமல் உடனடியாக ரஷ்யா வெளியேற வேண்டுமெனவும் தெரிவித்துள்ளன.
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு ஆயுத உதவி செய்யும் நாடுகளும் அதனை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அவை எச்சரித்துள்ளன.
மேலும், மாநாட்டில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் மத்திய ஆசிய நாடுகளுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.
அவ்வாறே, வடகொரியா தனது ஏவுகணைச் சோதனையைத் தவிர்க்க வேண்டுமெனத் தெரிவித்துள்ள ஜி 7 நாடுகள், தாய்வான் விவகாரத்தைச் சுட்டிக்காட்டி சீனா பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டுமெனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
T01
