அடுத்த பிரதமர் நானேதான்; சிறையில் கைதிகள் கூறினர் ராஜித அதிரடித் தகவல்

இலங்கையின் அடுத்த பிரதமர் நானே என்று நீர்கொழும்பு சிறைச்சாலையில் உள்ள கைதிகள் என்னிடம் கூறினர் என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

வெள்ளை வான் ஊடகவியலாளர் மாநாடு தொடர்பான வழக்கில் நான் கைதுசெய்யப்பட்டு நீர்கொழும்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் தடுத்துவைக்கப்பட்டிருந்தபோது என்னை அரசனைப் போல் கவனித்துக்கொண்டனர். கைதிகள் கௌரவமாக அன்புடன் கவனித்துக்கொண்டனர்.

கைதிகள் நான் குளிப்பதற்குத் தண்ணீரைச் சுடவைத்துக் கொடுத்தனர். வாழ்க்கையில் மிகவும் சுவையான தேங்காய் சம்பலை சிறையிலேயே சாப்பிட்டேன்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்குப் பிரதமர் என்ற வகையில் மஹிந்த ராஜபக்சவுடன் பணியாற்றுவதற்குப் பதிலாக என்னுடன் இலகுவாகப் பணியாற்ற முடியும் எனவும் கூறியுள்ளார் .

You May Also Like

About the Author: kalaikkathir