ஓய்வூதியத் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துச் சிலந்தி மனிதன் 38 அடுக்குமாடிக் கட்டிடத்தில் ஏறினார்!

பிரான்ஸில், புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் 60 வயதான ஆலியன் ரொபர்ட் 38 மாடிக் கட்டடத்தில் ஏறினார். இந்தச் செயலால், “ஆலியன் ரொபர்ட்” அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

பிரான்ஸ் நாட்டில் ஓய்வு பெறும் வயதை 62 இல் இருந்து 64 ஆக அந்நாட்டு அரசு அதிகரித்ததைத் தொடர்ந்து, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துப் பிரான்ஸின் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவாகச் சிலந்தி மனிதன் என அழைக்கப்படும் ஆலியன் ரொபர்ட், பாரிஸில் உள்ள 38 அடுக்குமாடிக் கட்டிடத்தின் உச்சி வரை வெறும் கைகளால் பிடித்து ஏறி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply