ஈஸ்டர் ஞாயிறுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் பாதிக்கப்பட்ட அனைத்து சமூகங்களையும் அமெரிக்கா நினைவுகொண்டுள்ளதோடு, நீதிக்காகக் காத்திருப்பவர்களுடன் ஒன்றிணைந்தும் நிற்கிறது, என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு உதிர்த்த ஞாயிறு அன்று கொடூரமான பயங்கரவாதச் செயலில் கொல்லப்பட்ட ஐந்து அமெரிக்கர்கள் உட்பட நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களை இன்று நான் நினைவுகூர்கிறேன், எனவும், பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் பாதிக்கப்பட்ட அனைத்து சமூகங்களுக்கும் அமெரிக்கா மரியாதை செலுத்துகிறது எனவும், நீதிக்காகக் காத்திருப்பவர்களுடன் அமெரிக்கா ஐக்கியமாக நிற்கிறது எனவும் தனது டுவிட்டர் பக்கத்தில் ஜூலி சுங் தெரிவித்திருந்தார்.
T01
