காற்றால் தூக்கி வீசப்பட்ட முதியவர் பலி

யாழ்ப்பாணம் – கோப்பாய் கைதடி வீதிவழியாக பயணித்துக்கொண்டிருந்த போது, கடும் காற்றில் தூக்கி வீசப்பட்ட கோப்பையை சேர்ந்த சந்திரசேகர் சரவணமுத்து (வயது 80) எனும் முதியவர் உயிரிழந்துள்ளார்.

தனது மகனுடன் மோட்டார் சைக்கிளில் கடந்த வெள்ளிக்கிழமை கோப்பாய் பகுதியில் இருந்து கைதடி நோக்கி பயணித்துள்ளார்.

இதன்போது கோப்பாய் – கைதடி பாலத்தடியில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தபோது, திடீரென வீசிய கடும் காற்றினால் மோட்டார் சைக்கிள் நிலை குலைந்துள்ளது. அதன்போது, பின்னால் இருந்த முதியவர் தூக்கி வீசப்பட்டு பாலத்துடன் மோதுண்டார்.

அதனை தொடர்ந்து முதியவர் அங்கிருந்து சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பயனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir