இலங்கையின் உள்நாட்டுக் கடனை மறுசீரமைக்க வேண்டும் என வெளிநாட்டுக் கடனாளிகள் முன்மொழிந்துள்ளதாகக் கூறிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,குறித்த விடயம் தொடர்பில் அரசாங்கம் இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், வெளிநாட்டுக் கடனாளிகளுடன் கலந்துரையாடல்களை ஆரம்பிக்கும்போது, இலங்கையே தனது உள்நாட்டுக் கடன்களை மறுசீரமைப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்க வேண்டும் என பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றினை விடுத்து ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
உள்நாட்டுக் கடன்களை மறுசீரமைப்பதால் சிலர் கூறுவது போல் உள்ளூர் வங்கிகள் மற்றும் பங்குச் சந்தைகளில் எந்த நெருக்கடியும் ஏற்படாது என்றும், EPF உறுப்பினர்களுக்கும் எந்த அநீதியும் ஏற்படாமல் இருப்பதையும் அரசாங்கம் உறுதி செய்யும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இலங்கை, வெளிநாட்டுக் கடனாளிகளுடன் தனித்தனியாகக் கலந்துரையாடல்களை ஆரம்பிக்கும் எனவும், அங்கு பாரிஸ் கிளப் மற்றும் இந்தியாவுடன் ஒரே மேடையில் கலந்துரையாடல்களும், சீனாவுடன் தனியான கலந்துரையாடலும் இடம்பெறும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
T01
