படுகாயமடைந்த மூதாட்டியும் உயிரிழந்தார்!

யாழ்ப்பாணம் நெடுந்தீவில் நகைகளை அபகரிக்கும் நோக்குடன் கொடூரமாக நடத்தப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி உயிரிழந்துள்ளார்.

100 வயது மூதாட்டியான பூரணம் இன்று வியாழக்கிழமை மாலை உயிரிழந்தார். இதயம் செயலிழந்ததனால் அவர் உயிரிழந்தார், என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை அதிகாலை நெடுந்தீவில் ஒரே வீட்டிலிருந்த 6 பேர் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் 3 பெண்களும் 2 ஆண்களும் உயிரிழந்தனர். 100 வயதான மூதாட்டி படுகாயங்களுடன் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரே இன்று உயிரிழந்துள்ளார்.

குறித்த கொலைச் சம்பவத்தில் நகைகளுடன் தப்பித்த பிரதான சந்தேக நபர், புங்குடுதீவில் வைத்து அன்றிரவே கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த தாக்குதலின்போது தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்த நாயும் உயிரிழந்துள்ளது.

You May Also Like

About the Author: digital

Leave a Reply