நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 7 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. லீற்றர் ஒன்று 340 ரூபாவாக இருந்த அதன் விலை, 333 ரூபாவாக மாற்றப்பட்டுள்ளது.
ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதனது லீற்றர் ஒன்றின் விலை 375 ரூபாவிலிருந்து 365 ரூபாவாக குறைவடைந்துள்ளது.
ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டு, புதிய விலை 310 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 135 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 465 ரூபாவாக இருந்த ஒரு லீற்றரின் விலை, 330 ரூபாவாக மாற்றப்பட்டுள்ளது.
ஆயினும், மண்ணெண்ணெயின் விலையில் மாற்றங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.