வரும் ஜூலை மாதத்தில் மின்சாரக் கட்டணம் குறித்து மீளாய்வு செய்யப்பட உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட அரசாங்க கொள்கை மற்றும் அமைச்சரவை தீர்மானங்களுக்கு அமைவாக மின்சாரக் கட்டணம் திருத்தப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மின் கட்டணத்தை ஆண்டுக்கு இருமுறை மீளாய்வு செய்து திருத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
T01