கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் கணித மன்றம் நடத்திய கற்றல் உபகரண கண்காட்சி இன்று கடந்த 2ஆம் திகதி பிற்பகல் கலாசாலையில் இடம் பெற்றது

கலாசாலை அதிபர் ச .லலீசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணம் தேசிய கல்வியியல் கல்லூரியின் உப பீடாதிபதி அருணாசலம் குகன் கலந்துகொண்டார். கணித மன்றக் காப்பாளர் விரிவுரையாளர் இ. இராஜபாலன் வாழ்த்துரை வழங்கினார்.

ஆரம்பக் கல்வி தொடக்கம் க.பொ.த. சாதாரண தரம் வரை கணிதம் கற்கும் மாணவர்களுக்கு பயன்படக்கூடிய கற்றல் உபகரணங்களை ஆசிரிய மாணவர்கள் உருவாக்கிக் காட்சிப்படுத்தியிருந்தனர்.
