யாழ்ப்பாணச் சிறையிலிருந்து 14 கைதிகள் இன்று விடுதலை!

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டுச் சிறைக் கைதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள விசேட அரச மன்னிப்புத் திட்டத்தின் கீழாக நாட்டிலுள்ள அனைத்துச் சிறைச்சாலைகளில் இருந்தும் 982 ஆண் கைதிகளும் 6 பெண் கைதிகளும் இன்று விடுதலை செய்யப்படுகின்றனர்.

இதன்படி, இன்று யாழ்ப்பாணச் சிறையிலிருந்தும் 14 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சிறு குற்றங்களைப் புரிந்தவர்கள், தண்டனைக் காலம் நிறைவுறும் நாளை அண்மித்தவர்கள், தண்டப் பணம் செலுத்த வசதியற்று சிறையில் அடைக்கப்பட்டவர்கள் போன்றவர்களே பெரும்பாலும இவ்வாறு விடுவிக்கப்படுவது வழமையாகும்.

கைதிகளுக்கான இந்தப் பொதுமன்னிப்பானது, நிபந்தனைகளின் அடிப்படையில் வழங்கப்படும் என சிறைத்துறை வட்டாரங்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: digital

Leave a Reply