அதிக பயணிகள் ஏற்றி செல்லும் பேருந்துகள்;அறிவிக்க அவசர எண்

ஆசன எண்ணிக்கைக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் குறித்து பொதுமக்கள் முறைப்பாடு செய்ய முடியும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதற்கமைய தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் 1955 என்ற அவசர தொலைப்பேசி இலக்கத்துக்கு அழைத்து இது தொடர்பாக முறைப்பாடு தெரிவிக்க முடியும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிருண்டா தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று நிலைமை காரணமாக பேருந்துகளில் ஆசன எண்ணிக்கைகளுக்கு மாத்திரம் பயணிகளை ஏற்றிச் செல்லுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இருந்தபோதும் சில தனியார் பேருந்துகளில் ஆசன எண்ணிக்கைகளுக்கு மேலதிகமாக பயணிகள் ஏற்றிச் செல்லப்படுவதாக தகவல் கிடைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir