ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத்தில் இருந்து தென்கிழக்கே 116 கிலோமீட்டர் தொலைவில்; 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் (NCS) தெரிவித்துள்ளது.
குறித்த நிலநடுக்கம், இன்று அதிகாலை 3:32 மணியளவில் 120 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தினால் உயிரிழப்புக்கள் எதுவும் இதுவரையில் நிகழவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த மே 3 புதன்கிழமை அன்று, 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஆப்கானிஸ்தானில் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
T01