காஸாப் பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான் வழித் தாக்குதலில் இஸ்லாமிய ஜிஹாத் தீவிரவாத அமைப்பின் மூன்று தளபதிகள் உட்பட ஏறக்குறைய 13 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.
உயிரிழந்தவர்களில் ஆறு பெண்களும் நான்கு குழந்தைகளும் அடங்குவதோடு, 20 பேர் காயமடைந்துமுள்ளதாகப் பலஸ்தீன சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் குடிமக்களுக்கு உடனடி அச்சுறுத்தலாக இருக்கும் ஜிஹாத் தீவிரவாத அமைப்பைக் குறிவைத்துக் குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
T01