ஜீவன் தொண்டமானுக்கு கிடைத்த புதிய பதவி

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் புதிய பொதுச் செயலாளராக ஜீவன் தொண்டமான் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவராக இருந்த முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவையடுத்து கட்சியின் நிர்வாக நடவடிக்கைகளுக்காக இடைக்கால நிர்வாக சபை ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அந்த இடைக்கால நிர்வாக சபை இன்று காலை ஒன்றுக் கூடவுள்ளது.

இதன்போது ஜீவன் தொண்டமான் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளராக நியமிக்கப்படுவார் என கட்சியின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம் கட்சியின் தலைவராக மத்திய மாகாணசபையின் முன்னாள் அமைச்சர் ரமேஷ் தெரிவு செய்யப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

You May Also Like

About the Author: kalaikkathir