தொண்டமானின் மறைவை அடுத்து கட்சிக்குள் கடும் மோதல்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளராக ஜீவன் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் பொதுச்செயலாளர் பதவியை வகித்த அனுஷியா சிவராஜா, பிரதி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் இடைக்கால நிர்வாக சபைக் கூட்டம் இன்று கொட்டகலையில் நடைபெற்றது.

இதன்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இ.தொ.காவின் தலைவர் பதவிக்கு மருதபாண்டி ரமேஷ் நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியிருந்தாலும், அப்பதவி அவருக்கு வழங்கப்படாது என தெரியவருகின்றது.

பெயர் முன்மொழிவு நிராகரிக்கப்பட்டுள்ளதாக இ.தொ.கா. தகவல்கள் தெரிவிக்கின்றன.

You May Also Like

About the Author: kalaikkathir