கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தருமபுரம் பகுதியில் இம்முறை கல்மடுக்குளம் புனரமைப்புக் காரணமாக சிறுபோக நெற்செய்கை இடைநிறுத்தப்பட்டது.
இப்பகுதியில் தமது வயல் நிலங்களில் நிலக்கடலைச் செய்கையில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகள், தற்பொழுது நிலக்கடலை பயிரிடப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்து வரும் நிலையில் நிலக்கடையில் வேர்ப் பகுதியில் அழுகிய நிலையில் ஏதோ ஒரு வகையான நோய்த்தொற்றுக் காணப்படுகின்றது என்று தெரிவித்துள்ளனர்.

நீரின்றி நிலக்கடலையில் விளைச்சலும் இல்லாத நிலையில் உள்ளதாகவும், பல லட்சம் செலவு செய்து பலனடைய முடியாதநிலை ஏற்படும் அபாயத்தில் தாம் இருப்பதாகவும் எனவே, இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தமது வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் உரிய தீர்வுகளைப் பெற்றுத் தர வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.
