யாழ்ப்பாணம் பண்ணைச் சுற்றுவட்டப் பகுதியில் வைக்கப்பட்ட நாகபூசணி அம்மன் சிலையை அகற்றுமாறு கோரி பொலிசார் தாக்கல் செய்த வழக்கை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இன்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது குறித்த வழக்கைத் தொடர பொலிசாருக்கு அதிகாரம் இல்லை என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் 18 ஆம் திகதி நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது பொலிஸாரின் வழக்கிடு தகைமை மற்றும் நீதிமன்றத்தின் நியாயாதிக்கம் தொடர்பாகக் கேள்விக்குட்படுத்தி, இந்து அமைப்புக்கள் சார்பில் சட்டத்தரணி என்.சிறிகாந்தா, அகில இலங்கை இந்து மாமன்றம், நல்லூர் ஆதீனம் சார்பில் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் உட்பட பல சட்டத்தரணிகளும் முன்னிலையாகி நீண்ட சமர்ப்பணங்களை முன்வைத்திருந்தனர்.
இந்த நிலையில் குறித்த விடயங்களை ஆராய்ந்த நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளது.
