ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பாக இலங்கைக் கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக மீது சுமத்தப்பட்ட நான்கு பாலியல் வன்கொடுமைக் குற்றச்சாட்டுகளில், மூன்று கைவிடப்பட்டுள்ளன.
32 வயதான தனுஷ்க குணதிலக ரி20 உலகக் கிண்ணத் தொடருக்காக சிட்னியில் இருந்தபோது குறித்த பாலியல் வன்கொடுமை தொடர்பான சர்ச்சை எழுந்தது.
இந்த நிலையில், சிட்னி நீதிமன்றத்தில் அந்த வழக்கு விசாரணையின்போது நான்கு பாலியல் வன்கொடுமைக் குற்றச்சாட்டுகளில் மூன்று குற்றச்சாட்டுகளை அரச வழக்கறிஞர் இன்று வாபஸ் பெற்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
T03