தேசியப் பாடசாலைகளுக்கு மாணவர்களை உள்வாங்குவது தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தேசியப் பாடசாலைகளின் இடைநிலைத் தரங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான கடிதங்களை கல்வி அமைச்சு வெளியிடுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் அந்தந்தப் பாடசாலைகளுக்குப் பதிவுத் தபால் மூலம் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும், என்றும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது.