ஜானக ரத்நாயக்கவை பதவியில் இருந்து நீக்க இ.தொ.கா ஆதரவு

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தற்போதைய தலைவர் ஜானக ரத்நாயக்கவை பதவியில் இருந்து நீக்கும் பிரேரணைக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவளிக்கும் என அக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவரை பதவி நீக்கம் செய்வதற்கான பிரேரணை பாராளுமன்றத்தில் மே 24 ஆம் திகதி காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

இந்நிலையில், குறித்த பிரேரணைக்கு ஆதரவளிக்க போதாவதாக ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளமை தற்பொழுது பேசுபொருளாக மாறியுள்ளது.

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply