கொரோனா தொற்று ; இலங்கையில் தற்போது எவரும் அடையாளம் காணப்படவில்லை

நாட்டில் கொரோனா தொற்று உறுதியான எவரும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த 65 நாட்களுக்கு பின்னர் நேற்றை தினம் முதல் தற்போது வரை எவரும் அடையாளம் காணப்படவில்லை என அவ்வமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை, ஆயிரத்து 950 ஆக காணப்படுகின்றது.

மேலும்  இதுவரை, 1446 பேர் குணமடைந்துள்ளனர். 493 பேர் வைத்தியசாலைகளில்  தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir