வெங்காயம் சீனி உட்பட ஆறு பொருட்களின் விலையை குறைத்தது சதொச!

இன்று (24) முதல் அமுலாகும் வகையில் ஆறு பொருட்களின் விலையை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது.

இதன்படி, சதோச பால்மா, உலர்ந்த மிளகாய், சிவப்பு பருப்பு, சோயாமீட், வெங்காயம் மற்றும் வெள்ளை சீனி போன்ற பொருட்களின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் 400 கிராம் சதொச பால் மா விலை 50 ரூபாவினால் குறைக்கப்பட்டு புதிய விலை 1030 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் உலர்ந்த மிளகாயின் விலை 45 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் விலை 1350 ரூபாவாகவும் மாற்றம் பெற்றுள்ளது.

மேலும், ஒரு கிலோகிராம் பருப்பின் விலை 325 ரூபாவாகவும், சோயாமீட் விலை 660 ரூபாவாகவும், பெரிய வெங்காயத்தின் விலை 129 ரூபாவாகவும், வெள்ளை சீனியின் விலை 239 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply