காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த சிறைக் கைதி ஒருவர் இன்று காலை தப்பிச் சென்றுள்ளதாகச் சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தப்பியோடிய கைதி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் 19 ஆம் இலக்க வார்ட்டில் சிகிச்சைபெற்று வந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
தப்பிச் சென்ற கைதி போதைப்பொருள் குற்றச்சாட்டில் தண்டனை பெற்று சுமார் 2 மாதங்களாக சிறையில் இருப்பதாக ஏகநாயக்க குறிப்பிட்டிருந்தார்.
தப்பியோடிய சிறைக்கைதியைத் தேடும் பணிகளை கராப்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
T01