ஒரு பெண் கத்தியால் தாக்கிக் கொலைசெய்யப்பட்டார் எனக் கிடைப்பெற்ற புகாரின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்த இரண்டு காவல்துறை அதிகாரிகளை, வேட்டையாடும் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சந்தேகநபர் ஒருவர் ஜப்பான் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவமானது, இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 4:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
31 வயது நிரம்பிய குறித்த சந்தேக நபர், உள்ளூர் அரசியல்வாதி ஒருவரின் மகன் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கியால் சுடப்பட்ட இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் கத்திக் குத்துக்கு இலக்காகிய பெண்ணும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சில மணிநேரங்களில் இறந்துவிட்டதாக ஜப்பான் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், கத்திக் குத்துக்கு இலக்காகி வயதான பெண் ஒருவரும் இறந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவமானது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
T01