யாழ்ப்பாணத்தில் இருந்து மூன்று பேர் அகதிகளாக தனுஷ்கோடியைச் சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் நிலவிவரும் பொருளாதார நெருக்கடியினால் விலைவாசி ஏற்றம், தொழில் வாய்ப்பு இல்லாததால் இந்தியாவிற்கு அவர்கள் அகதிகளாகச் சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுவரை இலங்கையிலிருந்து 253 பேர் அகதிகளாக இந்தியா
சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஓர் ஆண், இரு பெண்கள், உட்பட மூன்று பேரே இவ்வாறு அகதிகளாக இந்தியா சென்றுள்ளனர்.
நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்டு நள்ளிரவு 2.00 மணியளவில், கோதண்டராமர் கோவிலில் இறக்கி விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று அதிகாலை அப்பகுதிக்கு ரோந்து பணியில் ஈடுபட்ட ராமேஸ்வர கடலோர பாதுகாப்பு பொலிஸார் மூன்று பேரையும் கடலோர பாதுகாப்பு காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை செய்த பின்னர், அகதிகள் முகாமில் அவர்கள் இணைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
T03
